தமிழ்நாடு

காவலர் வீரவணக்க நாள்: உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகை வழங்கினார் முதல்வர்

சென்னை, அக்டோபர் 21: நாட்டின் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் பேணிக்காக்கும் காவலர்களின் பணியைப் போற்றும் வகையிலான காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் விஜய் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பணியின் போது உயிரிழந்த ஆறு காவலர்கள் மற்றும் கோமாவில் இருக்கும் ஒருவர் ஆகியோரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 5 கோடியே 96 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டுத் தொகையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். மேலும் காவல் நிலையங்களுக்கான அன்றாட செலவீன நிதியை உயர்த்தியுள்ள தமிழக அரசு, காவல் நிலையங்களுக்கு ஏற்ப மாத செலவீனத்தை 30 ஆயிரம், 40 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன