தேசியம்

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றம்: 21 குண்டு முழக்கம்

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோதி நாளை தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் முதன்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றக் கட்டடம், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தேசியக்கொடியைப் பிரதிபலிக்கும் வகையில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்கின்றன. இந்த வண்ணமயமான ஒளிரூட்டு தேசபக்தியையும் நாட்டின் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

In brief (English)

Prime Minister Narendra Modi is set to hoist the national flag at Delhi’s Red Fort on Independence Day with Delhi’s key landmarks illuminated in tricolour.

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற தேசிய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். விழாவுக்கு வந்த பிரதமருக்கு ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி காவல்துறை வீரர்கள் அடங்கிய அணிவகுப்பு மூலம் காவல் மரியாதை வழங்கப்பட்டது.

தேசியக் கொடியேற்றத்துடன், 1721-வது ஃபீல்டு பேட்டரி (சடங்கு பிரிவு) சார்பில் 21 குண்டுகள் முழங்கின. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 105 மி.மீ. இலகுரக பீரங்கிகள் இந்த மரியாதைக்காக பயன்படுத்தப்பட்டன.

இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக, செங்கோட்டை விழாவில் முதன்முறையாக தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டது. இவ்வாண்டு ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டாகவும் கொண்டாடப்படுகிறது.

தேசியக் கொடியேற்றத்துக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன