அரசியல்

புதுச்சேரி பாமக தலைமை நிர்வாகக் குழு தலைவராக கணபதி நியமனம்: அன்புமணி ராமதாஸுக்கு நன்றி

புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு தலைவராக கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர் கட்சித் தலைமைக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதுச்சேரி மாநில தலைமை நிர்வாகக் குழு தலைவராக தம்மை நியமனம் செய்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லாட்சி அமைந்திட கட்சி நிர்வாகிகளுடனும் தொண்டர்களுடனும் இணைந்து தீவிர களப்பணியாற்ற உறுதி ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்புதிய நியமனத்தை தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன