போதைப்பொருள் கடத்தல்: வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தலைவர் இந்தியா கொண்டுவரப்பட்டார் – அமித் ஷா
புது தில்லி, ஆகஸ்ட் 14: போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ‘ஜீரோ டாலரன்ஸ்’ (Zero Tolerance) கொள்கையில் புதிய மைல்கல்லை உருவாக்கி, நார்கோடிக்ஸ் கண்ட்ரோல் பியூரோ (NCB) ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல் தலைவர் வீரேந்திர சிங் பசோயாவை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தனது சமூக ஊடகப் பக்கத்தில், மோடி அரசு வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர்களின் முழுமையான வலையமைப்பையும் கடுமையான அணுகுமுறை மூலம் அழித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
வீரேந்திர சிங் பசோயா, கோகெயின் மற்றும் மெஃபிட்ரோன் ஆகியவற்றின் பெரிய அளவிலான கடத்தல்களுடன் தொடர்புடைய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் தலைவராகக் குற்றம் சாட்டப்பட்டவர். டெல்லி நீதிமன்றம் அவர் மீது ஜாமீனில்லா கைது வாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், சர்வதேச இராஜதந்திர வழிகள் மூலம் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
