புதுச்சேரி
புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தொடர்: தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கடிதம்

புதுச்சேரி, ஆகஸ்ட் 14: எதிர்வரும் ஆகஸ்ட் 24, 2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தொடரில், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஏ.எம்.எச். நாஜிம், எம்எல்ஏ அவர்கள் பேரவைத் தலைவருக்கு நேரில் கடிதம் அளித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தெரிவிக்கையில், புதுச்சேரி ஒரு தமிழ் பேசும் பகுதியாகும். எனவே, சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது அவசியம். இது தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டை மதிக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.

