புதுச்சேரி

முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் நேரில் ஆய்வு

புதுச்சேரி, செப். 04: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட ரங்கவிலாஸ் தோட்டம் பிரதான சாலையில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சாலை சேதத்தை சீரமைக்கும் வகையில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பகுதியில் நீண்ட காலமாக சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் உரிய நிதி ஒதுக்கீடு செய்து புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் இச்சாலைப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளைத் தரமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார்.

நீண்ட நாள் கோரிக்கையான சாலைப் பணிகளை விரைந்து மேற்கொண்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன