தமிழ்நாடு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: மக்கள் வெள்ளம்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அக்னிகுளத்தில் பக்தர்கள் விளக்கேற்றி, நீர் ஊற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்த பக்தர்கள், அங்காளம்மனை தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்த பின்னர் பக்தர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியதால், மேல்மலையனூர் பகுதியில் செல்லும் அனைத்து திசைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் முக்கியச் சாலைகள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
