தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்கள்: மீட்க நடவடிக்கை கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதுடன், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகையும் மீட்டுத் தர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடல்சார் மீன்பிடித் தொழிலை சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு விரைந்து தலையிட்டு மீனவர்களையும் படகையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன