தமிழ்நாடு
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இந்துஜா குழும நிர்வாகிகள் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, இந்துஜா குழுமத்தின் தலைவர் அசோக் இந்துஜா உள்ளிட்ட நிறுவன நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், OHM மொபிலிட்டி நிறுவனத்தின் தலைவர் ஷோம் இந்துஜா மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ஷேனு அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
