புதுச்சேரி
பட்டதாரி நிலைத் தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வெளியீடு
புதுச்சேரி அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், பட்டதாரி நிலைத் தேர்வுக்கு வரும் 23-ஆம் தேதி வரை புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மையங்களில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதள முகவரியான recruitment.py.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தேர்வாணைய அலுவலக தொலைபேசி எண் 0413-2233338-ஐ தொடர்புகொள்ளலாம்.

