தேசியம்

எல்பிஜி மானிய இ-கேஒய்சி: ஆகஸ்ட் 16 கடைசி தேதி

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானியம் தொடர்ந்து பெற, வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி முடிக்க வேண்டும் என இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி செய்யப்படாவிட்டால், மானிய விலையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். சரிபார்ப்பு முடியும் வரை சிலிண்டர் விநியோகம், முன்பதிவு அல்லது மானியப் பலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் மூலம் ஆன்லைனில் இ-கேஒய்சி செய்யலாம்; இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் IndianOil ONE, பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் Hello BPCL, ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP Pay செயலியைப் பயன்படுத்தலாம். அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு முகவரிடம் ஆதார் அட்டை மற்றும் இணைப்பு விவரங்களுடன் நேரில் சென்று பயோமெட்ரிக் சரிபார்ப்பும் செய்யலாம். சில பகுதிகளில் சிலிண்டர் விநியோக ஊழியர் மூலமும் சரிபார்ப்பு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இ-கேஒய்சி முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை; தங்கள் இணைப்பு நிலையை அதிகாரப்பூர்வ செயலி அல்லது முகவர் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன