புதுச்சேரி
80-வது சுதந்திர தினம்: ஆகஸ்ட் 13 முதல் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் – அமித் ஷா வேண்டுகோள்
புதுச்சேரி, ஆகஸ்ட் 13: இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் இன்று (ஆகஸ்ட் 13) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

