புதுச்சேரி நகரப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு: போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் திவ்யா உத்தரவு
புதுச்சேரி, ஆகஸ்ட் 12: புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதற்குத் தடை விதித்து, போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் (SP) திருமதி. திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகளின்படி, காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் புதுச்சேரி நகரப்பகுதிகளுக்குள் லாரிகள், கன்டெய்னர் லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் இயக்கப்படக்கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்களைத் தடுக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.