புதுச்சேரி

புதுச்சேரியில் என்சிசி மாணவர்களின் 800 கி.மீ கடல் சாகச பயணத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் தேசிய மாணவர் படை சார்பில் ‘கடலுக்கு போவோம்’ திட்டத்தின் கீழ் ‘ஸ்வர்ணம் 2026’ பாய்மரப்படகு கடல் சாகச பயண தொடக்க விழா நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி விழாவில் கலந்து கொண்டு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சபாநாயகர் செல்வம் மற்றும் என்சிசி அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்றனர். இச்சாகச பயணம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை, கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் வழியாக 800 கிலோமீட்டர் தூரம் பயணித்து செப்டம்பர் 27 அன்று நிறைவடைகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 கேடட்கள் பங்கேற்கின்றனர்.


Puducherry Chief Minister N. Rangasamy flagged off the ‘Swarnam 2026’ sailing adventure voyage organized by the National Cadet Corps (NCC) at Thengaithittu Fishing Harbour. The 63-day expedition covers nearly 800 kilometers along the eastern coast, traveling through Cuddalore, Kanyakumari, Thoothukudi, Rameswaram, and Chennai. A total of 100 selected NCC cadets from across India are participating in this maritime adventure. The initiative aims to enhance seamanship, leadership qualities, resilience, and awareness of India’s marine heritage among youth.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button