புதுச்சேரி

களித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் கலை கல்லூரியில் பழந்தமிழ் எழுத்துகள் பயிலரங்கம்

புதுச்சேரி மாநிலம் களித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் கலை கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பழந்தமிழ் எழுத்துகள் தமிழில் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லெப்டினன்ட் டாக்டர் கதிர்வேல் குத்துவிளக்கேற்றி பயிலரங்கை தொடங்கி வைத்தார். இதில் ஐந்தாம் வகுப்பு மாணவி செல்வி கா.நேயஸ்ரீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பண்டைய தமிழின் குறியீடுகள் குறித்து எழுதி அனைவரின் பாராட்டையும் பெற்றார். பண்டைய கால தமிழ் எழுத்து முறைகள் மற்றும் வரலாற்று பின்னணி குறித்து சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன. பயிலரங்கில் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


A one-day workshop titled ‘Ancient Tamil Scripts: An Introduction in Tamil’ was organized by the Department of Tamil at Kamaraj Arts College in Kalitheerthalkuppam, Puducherry. College Principal Lt. Dr. Kathirvel inaugurated the workshop by lighting the ceremonial lamp. Keynote speakers delivered lectures on the history, evolution, and application of ancient Tamil script forms. A unique highlight of the event was the participation of a 5th-grade student, K. Neyasree, who demonstrated her exceptional skill in writing ancient Tamil symbols. Faculty members and students from various departments actively participated in the informative session.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *