தமிழ்நாடு
வெள்ளப்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்காக குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவி ஆய்வாளர் உத்தராம்பாள் மற்றும் காவல்துறையினர் இதில் பங்கேற்று, குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது, துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவிப்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறையினர் வலியுறுத்தினர்.

