தமிழ்நாடு

விளையாட்டுத் துறையில் செய்யப்பட்ட முதலீடு பலன் தரத் தொடங்கியுள்ளது: செல்வப்பெருந்தகை பாராட்டு

சென்னை, செப். 30: தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முதலீடுகள் தற்போது சிறப்பான பலனைத் தரத் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அத்துடன் வீரர் மற்றும் வீராங்கனைகளின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான திறன் முதலீடுகளும் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டமிட்ட தொலைநோக்கு நடவடிக்கைகளின் அறுவடையாகவே, தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேசிய அளவிலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ச்சியாகப் பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்து பெருமை சேர்த்து வருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விளையாட்டுத் துறையில் அரசு மேற்கொள்ளும் நிதி ஒதுக்கீடு என்பது வெறும் செலவு கிடையாது; மாறாக அது எதிர்காலத் தலைமுறையின் முன்னேற்றத்தின் மீது செய்யப்படும் மதிப்புமிக்க முதலீடு என்றும், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் போன்றோரின் தொடர் சாதனைகள் இதற்கு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கின்றன என்றும் செல்வப்பெருந்தகை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன