தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் முன்மொழிந்தார். நீட் தேர்வு சமூகநீதி, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் முறையால் பாதிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே மேற்கொள்ளும் வகையில், தொடர்புடைய மத்திய சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்துகிறது.

நீட் தேர்வு நடத்துவதில் தொடர்ச்சியாக எழும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளையும் தீர்மானத்தில் சுட்டிக்காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன