காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நேரு எம்.எல்.ஏ. வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு!
புதுச்சேரி, செப். 18:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விநாயககம் தொகுதியில் விறுவிறுப்பாக பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து இன்று காலை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நேயம் மக்கள் கழக தலைவருமான நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி, மேட்டுத் தெரு, நடுத்தெரு, அகத்தியர் வீதி, அண்ணா வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற எம்.எல்.ஏ. நேரு, பொதுமக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.
இந்த தேர்தல் பிரச்சார நிகழ்வில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் பெருந்திரளாக கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

