தமிழ்நாடு
சென்னையில் மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!
சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தின் போது தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், மாலை நேரத்தில் மீண்டும் கணிசமாக உயர்ந்து நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.14,800-க்கு விற்பனையாகி வருகிறது.
முன்னதாக, இன்று காலை நேர வர்த்தகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.600 குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் வணிக நிலவரங்களின் அடிப்படையில் மாலையில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது நுகர்வோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


