தேசியம்

உத்தராகண்ட் பயணம்: துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு

டேராடூன், ஆக. 16: துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு) மற்றும் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தனது இரண்டு நாள் பயணத்தின் போது, டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாதமியில் (IGNFA) பயிற்சி பெறும் இந்திய வனப்பணி அதிகாரிகளிடையே துணை குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, முசௌரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதமியில் (LBSNAA) பயிற்சி பெறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன