தமிழ்நாடு
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வரும் 23 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்
சென்னை, அக்டோபர் 21: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரும் 23 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.