புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இந்தியாவின் முதல் ரோபோடிக் மழலையர் ப்ரீஸ்கூல் திறப்பு விழா
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி முத்தியால்பேட்டை செயின்ட் ரொசாரியோ வீதியில் விஜயதசமியை முன்னிட்டு கிண்டர் பார்ட்ஸ் மழலையர் ரோபோட்டிக் ப்ரீஸ்கூலின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளிகளின் தலைவர் ரங்கநாதன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மழலையர்கள் ஸ்ரீநிதி, முகிலன், அர்சுவி ஆகியோர் ரிப்பன் வெட்டி பள்ளியைத் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் குமரேசன் மற்றும் கௌரி குமரேசன் ஆகியோர் முன்னிலையில் கலாச்சார முறைப்படி பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமைப் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி, ஆசிரியர் ஹேமலதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதுவே இந்தியாவின் முதல் ரோபோடிக் ப்ரீஸ்கூல் கிண்டர் பார்ட்ஸ் ஆகும் என்றும், இங்கு மழலை செல்வங்களுக்கு ரோபோடிக் குறித்த வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.