புதுச்சேரி
புதுச்சேரியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலோர காவல்படை தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரியில் மழைக்காலத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் லாஸ்பேட்டையில் உள்ள கடலோர காவல்படை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மத்திய மற்றும் புதுச்சேரி கடலோர காவல்படை சார்பில் டிஐஜி சுரேந்தர் சிங் தசீலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வது மற்றும் அவசரகால நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் என்கிற ரமேஷ் கலந்துகொண்டார்.