புதுச்சேரி

புதுச்சேரியில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம்

புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரியில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில் 21 குண்டுகள் முழங்க மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்று காவலர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி உயிர்நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து காவலர் அணிவகுப்பு மரியாதையையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

கடந்த ஓர் ஆண்டில் பணியின்போது உயிர்நீத்த ஒன்பது காவலர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த காவலர்களின் வீரமும் அர்ப்பணிப்பும் நினைவுபடுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன