அந்தமானை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23 ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
புதுச்சேரி, அக்டோபர் 20: அந்தமானை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான வடபழனி, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மதுரை மாநகரின் கோரிப்பாளையம், அண்ணாநகர், கே.கே.நகர், தமுக்கம் மைதானம், தெப்பக்குளம், மாட்டுத்தாவனி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.