புதுச்சேரி

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசுக்கு திமுக எம்எல்ஏ கண்டனம்

புதுச்சேரி, அக்டோபர் 20: பருவமழை தொடங்கும் முன் வடிகால் தூர்வாறுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், உட்கட்டமைப்பு பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து விக்னேஷ் கண்ணன் கோரிக்கை மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காலநிலை மாற்றத்தால் மழை பெய்தால் நகரப் பகுதி முழுவதும் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு மெத்தனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், வாழைக்குளம், கணேஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன