புதுச்சேரி

புதுச்சேரி மகாத்மா காந்தி வீதி சண்டே மார்க்கெட்டில் பண்டிகையை முன்னிட்டு குவிந்த மக்கள் கூட்டம்

புதுச்சேரி, அக்டோபர் 19: புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சண்டே மார்க்கெட் வாரச்சந்தையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் புதுச்சேரி நகர சாலையில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வருகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் இந்த வார ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழக பகுதியை சேர்ந்த விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சண்டே மார்க்கெட்டிற்கு பொருட்களை வாங்குவதற்காக குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த வார ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியதால் அனைத்து கடைகளிலும் விற்பனை கலை கட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன