புதுச்சேரி

புதுச்சேரி முத்தியால்பேட்டை வரதவள்ளி மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவில் மலையப்ப சுவாமி அலங்காரம்

புதுச்சேரி, அக்டோபர் 19: புதுச்சேரி முத்தியால்பேட்டை யானமுகம் மரம் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ வரதவள்ளி மகாமாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி மகோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாவின் ஏழாம் நாள் மற்றும் புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் திருமலை திருப்பதி மலையப்ப சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நலம் தரும் நவராத்திரி என்ற தலைப்பில் மருத்துவர் சங்கரதேவி அம்மையார் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகமும் ஊர் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன