புதுச்சேரி

ஆயுத பூஜையையொட்டி சாலைகளில் பூசணிக்காய் உடைக்க தடை உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி, அக்டோபர் 19: புதுச்சேரியில் ஆயுதப் பூஜையை ஒட்டி சாலைகளில் பூசணிக்காய்களை உடைக்கக் கூடாது என உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் ஐயாவு எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பூஜைகள் செய்து திருஷ்டிக்காக பூசணிக்காய்களை சாலைகளில் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதால், அவற்றின் மீது வாகனங்கள் ஏறும் போது வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். எனவே, சாலை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நெகிழியால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் மற்றும் கேரி பேக்குகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் ஐயாவு அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன