புதுச்சேரி

புதுச்சேரியில் ‘சிங்காரவேலரும் விடுதலைப் போராட்டமும்’ கருத்தரங்கம்: கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம் சார்பில் சிறப்பு நிகழ்வு

புதுச்சேரி: புதுச்சேரி கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம் சார்பில் ‘சிங்காரவேலரும் விடுதலைப் போராட்டமும்’ என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கம் புதுச்சேரியில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பையும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் மகத்தான பணிகளையும் எடுத்துரைக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கருத்தரங்கிற்கு க. ஜெயந்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் பெரியாண்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்காரவேலரும் விடுதலைப் போராட்டமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் தொழிலாளர்களின் உரிமைகளையும் தேச விடுதலையையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்ததில் தோழர் சிங்காரவேலரின் பங்கு அளப்பரியது என்றும், அவரது சமூக மற்றும் அரசியல் சிந்தனைகள் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டக்கூடியவை என்றும் விரிவாக விளக்கினார்.

இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தோழர் லெனின் துரை சிறப்பாகச் செய்திருந்தார். மேலும் சமூக சிந்தனையாளர்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் ஒன்றிணைத்து இத்தகைய விழிப்புணர்வு கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்துவது சமூக முன்னேற்றத்திற்கு அவசியமானது என நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கருத்தரங்கில் பேராசிரியர் முனைவர் நா. இளங்கோ, கலைமாமணி பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன், தோழர் லியாகத் அலி, தோழர் ஈரம் ராஜேந்திரன், ஆசிரியர் வாகை, ஆசிரியர் சின்ன சேகர், இளவரசி சங்கர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் திரளான தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன