அரசியல்

தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், மதியம் 1.00 மணி வரையிலான வாக்குப்பதிவு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று மதியம் 1 மணி நிலவரப்படி 56.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தின் தாராபுரம் தொகுதியில் 56.09 சதவீத வாக்குகளும், மதுராந்தகம் தொகுதியில் 55.19 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் 60.32 சதவீத வாக்குகளும், ரெஜிநகர் தொகுதியில் 56.43 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

முன்னதாக, இன்று காலை 7.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். நண்பகல் வேளையில் நிலவிய வெயில் சூழலிலும் வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்தலின் தொடக்கக் கட்டத்தில், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான்பட்டு அரசு நூலக வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் சேது செல்வம் நேரில் சென்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதேபோல், தாராபுரம் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் மனிஷ் நாரணவரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குப்பதிவு மாலை வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன