புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு ஆதரவாக க.பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கு.சேது (எ) சேதுசெல்வத்தை ஆதரித்து, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமையில் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆதரவுடன் களம் காணும் வேட்பாளர் கு.சேதுவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கோரி தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பூத் எண் 28-க்கு உட்பட்ட அன்னை தெரேசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் க.பொன்முடி தலைமையில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரிக்கப்பட்டன. இந்நிகழ்வில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், புதுச்சேரி மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன