புதுச்சேரி

மாணவர்களுக்கான ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு நேரில் அழைப்பு!

புதுச்சேரி: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விண்வெளி அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், மார்டின் குழுமம், ஸ்பேஸ் சோன் இந்தியா (Space Zone India) மற்றும் குளோபல் ஹெல்ப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள திருவிடந்தை பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, புதுச்சேரி மேதகு துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் செய்முறை அறிவை வழங்கும் வகையிலும், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கிலும் இந்த ராக்கெட் ஏவுதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சந்திப்பின் போது, ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், குளோபல் ஹெல்ப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் எல்.ஜே.கே (LJK) நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு துணைநிலை ஆளுநர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன