புதுச்சேரி

புதுச்சேரி பனித்திட்டில் கடற்கரை தூய்மைப் பணி மற்றும் கடல்சார் விழிப்புணர்வு முகாம்: மீனவர்கள், மாணவர்கள் பங்கேற்பு!

புதுச்சேரி, செப். 22:

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இன்காய்ஸ் (INCOIS) மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MSSRF) இணைந்து, ‘தூய்மையான கடல் – பாதுகாப்பான கடல் 2026’ திட்டத்தின் கீழ் கடற்கரை தூய்மைப்பணி மற்றும் கடல்சார் விழிப்புணர்வு முகாமை கிருமாம்பாக்கம் அருகே உள்ள பனித்திட்டு மீனவ கிராமத்தில் நடத்தின.

இந்நிகழ்ச்சியில் இன்காய்ஸ் விஞ்ஞானி கோவர்த்தன், கிரிஜா, வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் பனித்திட்டு கிராம தலைவர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது கடல் மாசுபாடு, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கினர். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘ஃபிஷ்’ (Fish) மொபைல் செயலி மூலம் வழங்கப்படும் மீன்பிடி மண்டல (PFZ) ஆலோசனைகள் மற்றும் கடல் வானிலை முன்னறிவிப்பு சேவைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இம்முகாமில் பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 75 மீனவர்கள், மீனவப் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கடற்கரையை தூய்மைப்படுத்தினர். கழிவுகளை தரம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சி முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவன வளர்ச்சி உதவியாளர் லூர்துசாமி மலையப்பன் மற்றும் அறிவாற்றல் பணியாளர் அகிலரசி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன