புதுச்சேரி

பிரதமர் மோடி பிறந்தநாள்: திருக்கனூரில் 1,000 மகளிர் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜை – ஆளுநர் கைலாசநாதன் பங்கேற்பு!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் மற்றும் அவரது துணைவியார் வசந்தி நமச்சிவாயம் ஆகியோரின் ஏற்பாட்டில், திருக்கனூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 1,000 மகளிர் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடனும், பூரண உடல் ஆரோக்கியத்துடனும் தேசப்பணியாற்ற வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் தனது குடும்பத்தினருடன் நேரில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.

திருக்கனூர் முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆன்மீக வழிபாட்டு நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரளாகப் பங்கேற்று உலக அமைதி மற்றும் மக்கள் நலன் வேண்டி நெய் தீபமேற்றி கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன