காரைக்கால்

காரைக்கால்: மின்சாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் – மின்வாரிய அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ டாக்டர் விக்னேஸ்வரன் நேரில் வலியுறுத்தல்!

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் மின்சாரப் பிரச்சனைகளை விரைந்து சரிசெய்யுமாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் மின்வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து உத்தரவிட்டுள்ளார்.

கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வந்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மக்கள் மருத்துவர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் அவர்களிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து உடனடியாக களத்தில் இறங்கிய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்னேஸ்வரன், நேரடியாக மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பொதுமக்கள் எதிர்கொள்ளும் மின்தடை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உடனடியாகவும் விரைவாகவும் தீர்வு கண்டு மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன