விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை மல்லர்கம்ப போட்டி: விழுப்புரம் கல்லூரி மாணவ, மாணவிகள் அபார வெற்றி!

விழுப்புரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி அளவிலான மல்லர்கம்பம் போட்டிகளில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரக் கல்லூரி மாணவ, மாணவிகள் திறம்பட விளையாடி வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

இப்போட்டியின் பெண்கள் பிரிவில், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவி வி. சங்கீதா முதல் பரிசையும், வி. லேனா ஸ்ரீ இரண்டாம் பரிசையும் வென்று சாதனை படைத்தனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூன்றாம் பரிசையும், எம்.ஜி.ஆர். மகளிர் கல்லூரி நான்காம் பரிசையும் பெற்றன.

ஆண்கள் பிரிவில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர் பகவத்சிங் முதல் பரிசையும், வெங்கட் இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றனர். தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ஹேமச்சந்தர் மூன்றாம் பரிசையும், அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர் ஷ்யாம் நான்காம் பரிசையும் வென்றனர். வெற்றி பெற்று அடுத்த கட்டப் போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சியாளர் மல்லன் ஆதித்தன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன