தமிழ்நாடு

மயிலாடுதுறை தருமபுரத்தில் அண்ணல் ஆலவாய் சொக்கநாதர் – மீனாட்சி திருக்கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு அண்ணல் ஆலவாய் சொக்கநாதர் – மீனாட்சி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் முறைப்படி தொடங்கப்பட்டு வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாராயணங்களுடன் பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமானக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது.

தருமபுர ஆதீன குருமகா சந்நிதானத்தின் அருளாசியுடன் நடைபெற்ற இந்த ஆன்மீக பெருவிழாவில், சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்துகொண்டு சொக்கநாதர் மற்றும் மீனாட்சி அம்மனை மனமுருக தரிசித்து இறையருள் பெற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன