தமிழ்நாடு
பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



