புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் 2026: தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தீவிர ஆலோசனை!

புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் செலவின கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி திரு. ASPS. ரவிப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி துல்லியமாகக் கண்காணிப்பது, பறக்கும் படைகளின் செயல்பாடுகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களின் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், முறைகேடான பணப் புழக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசுத் துறைகளின் முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன