புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு: மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக திரு. கு. சேது @ சேது செல்வம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திமுக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில் குமார், வே. கார்த்திகேயன், அ. செந்தில் @ ரமேஷ், விக்னேஷ் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன