அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள்: விழுப்புரத்தில் மாபெரும் ஆணழகன் போட்டி – பரிசுகளை வழங்கி அமைச்சர் வாழ்த்து!

விழுப்புரம்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரத்தில் மாபெரும் ஆணழகன் போட்டி வெகுசிறப்பாக நடைபெற்றது. இளைஞர்களின் உடற்கட்டமைப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இப்போட்டியினை திரு. P.K. சிவனேசன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
விழுப்புரம் BWDA ராயல் கோர்ட்யார்டில் நடைபெற்ற இந்த ஆணழகன் போட்டியில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான உடற்கட்டமைப்பு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது உடல்திறனை வெளிப்படுத்தினர். நடுவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராக நேரில் கலந்துகொண்டார். போட்டியில் வெற்றி பெற்ற உடற்கட்டமைப்பு வீரர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.