புதுச்சேரி

புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒளிபரப்பு: பாஜக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு!

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சியின் 137-வது பகுதி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் பாஜக சார்பில் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டது.

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி. பி. ராமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில அறிவுசார் பிரிவு அமைப்பாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதில் திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பிரதமரின் வானொலி உரையை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மாநில ‘மனதின் குரல்’ பொறுப்பாளர் க. வெற்றிச்செல்வம், நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், மாநில துணைத் தலைவர் ரத்தினவேல், மாநில செயலாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன