புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அரசியல் விவகாரக் குழு கூட்டம்: வைத்திலிங்கம், நாராயணசாமி பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் அரசியல் விவகாரக் குழு (Political Affairs Committee) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுச்சேரி மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான வி. வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் மு. கந்தசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் நேரில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான களப் போராட்டங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் மக்கள் நலப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன