புதுச்சேரி
தட்டாஞ்சாவடியில் மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்: உடனடியாக சீரமைக்க நடவடிக்கை
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்ட நிலையில், மக்கள் சேவகர் அசோகானந்த் மின்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுத்தார். மின்துறை ஊழியர்கள் சேதமடைந்த கம்பங்களை அகற்றி புதிய கம்பங்கள் மற்றும் வயர்களை அமைத்தனர். பணிகளை நேரில் பார்வையிட்ட அசோகானந்த், மின்துறை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
In brief (English)
Damaged electric poles and snapped power cables caused by heavy rains in Thattanchavady were promptly replaced after former MLA Ashok Anand coordinated with electricity board officials.