தமிழ்நாடு
தூத்துக்குடியில் சர்வர் கோளாறால் உடற்கூறாய்வு தாமதம்: உறவினர்கள் சாலை மறியல்!
தூத்துக்குடி மாவட்டம் கீழ தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடற்கூறாய்வுக்கான ஆவணங்களை கணினியில் பதிவேற்ற மருத்துவமனையில் சர்வர் கோளாறு ஏற்பட்டதால் உடற்கூறாய்வு செய்ய தாமதமானது. காலை முதல் அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இறுதிச்சடங்கு பொருட்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீரமைத்தனர்.
In brief (English)
Relates of a deceased farmer in Thoothukudi blocked the road with funeral items after a server glitch delayed uploading autopsy documents.
