தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோயிலில் 10 நாட்களில் ₹2.52 கோடி காணிக்கை வசூல்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்து புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத விழா மற்றும் ஆடிக் கிருத்திகை தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாக்களின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் கோயில் உண்டியலில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் ரொக்கம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 165 கிராம் தங்கம் மற்றும் 10 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

In brief (English)

The famous Tiruttani Murugan temple collected over 2.5 crore rupees along with gold and silver in its hundi during the recent Aadi festival period.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன