புதுச்சேரி
புதுச்சேரியில் மழைநீர் சேமிக்க ஜெர்மன் தொழில்நுட்ப திட்டம் – ஆய்வு
புதுச்சேரியில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் காமராஜர் நகர் தொகுதியில் புதிய நீர் மேலாண்மை திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் ஜெர்மன் தொழில்நுட்ப அடிப்படையிலான வாட்டர் மேனேஜ்மென்ட் மற்றும் ஈகோ பிளாக் முறையை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் அழைப்பின் பேரில் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இஆய்வை மேற்கொண்டனர்.
In brief (English)
Officials surveyed Kamaraj Nagar in Puducherry to introduce German Eco-Block rainwater harvesting technology to mitigate waterlogging and boost groundwater levels.
