புதுச்சேரி
நெல்லித்தோப்பில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச பந்தல் மற்றும் உபகரணங்கள் சேவை துவக்கம்
புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குடும்ப சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு தேவையான பந்தல், நாற்காலிகள் மற்றும் ஐஸ் பாக்ஸ் ஆகியவற்றை இலவசமாக வழங்கும் சேவையை தமிழக வெற்றி கழகம் தொடங்கியுள்ளது. தாரகை அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் ஏற்பாட்டில் நெல்லித்தோப்பு சுமங்கலி திருமண மண்டபத்தில் இதற்கான துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் சாய் சரவணன், ராமு மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.
In brief (English)
Tamizhaga Vettri Kazhagam launched a welfare initiative in Nellithope to provide free tents, chairs, and ice boxes for public events and funerals.